பாதங்களின் அடிக்குறிப்பு
உழைப்பின் சிம்மாசனம்
பறையறிந்து பெருமையைத் தெரிவிக்க வேண்டியதில்லை
அறுபட்டு நிற்கின்ற
வேளைவரும் போதுதான்
வேலை இழக்கும்
அபாயம் நேரும்
ஏற்றத் தாழ்வுகளை
எளிதில் எதிர்கொள்ளத்
தயக்கம் காட்டியதில்லை
தயங்கியும் நின்றதில்லை
விரல்களின் பிடிகளுக்குள்
தன்னையே செதுக்கி
தன்னிலை அறிந்தும்
ஓய்வில்லாத உழைப்பை
நிரூபித்த ஜோடிகள்
இரண்டும் இல்முன்தான்
தற்புகழ் வேண்டா
மௌனித்து நிற்கும்!
ஆதி தனபால்
வாரம் நாலு கவி: பாதங்களின்
previous post