முதல் ஆசான்…
உன் பேர் சொல்லு?
நான் சொன்னேன்
ஆனந்தப்பட்டாள்
குட்டிய ஸ்கூல்ல சேர்திடலாம்
அடபாவமே. இதற்கா
ஆனந்தபட்டாய்
முதல்நாள் என்னைவிட
மிககழுதாள்
ஆசிரியர் அடிப்பதை சொன்னேன்
அப்படித்தான் ஒழுங்கா படியென்றாள்
ஆசிரியர் தவறிழைத்தபொழுது ஆவேசம்கொண்டாள்
புரியாமல் குழம்பி போனேன்
புரிந்துக்கொண்டேன்
முதல்லாசான் அவளென்று
மித்ராசுதீன்