காதல் என்பது கண்றாவி என்றே எண்ணியிருந்தேன்
கன்னியாஸ்திரி ஆகத்தான் ஆயத்தமானேன் காதலுக்கு பயந்து
காளையர் காமுறவே காதலை கருவியாக்கு வரென கலங்கியிருந்தேன்
கலங்கியும் காதலித்தேன்… காமுறும் எண்ணமிலாதே காதலிக்கப்பட்டதால்
காதலித்தவனோ கடந்து சென்றுவிட்டான் கண்டுகொள்ளாமலே காசில்லாததாலே
காரணமின்றியே காதலில்லையோ கடிந்து கொண்டேன் காதலையே
காலங்களாகின கல்யாணமும் ஆகியது காதலிக்கப்படுகிறேன் கணவனாலே
கருத்தொருமித்தே காதலிக்கிறோம் காரணம் ஏதுமுளதோ அறியேன்
காரண காரியமின்றியும் காதலிக்கலாமெனவே கற்றுக் கொண்டேன்
காதலியுங்கள்
காலமெல்லாம்
காண்பவை அனைத்தையுமே
மெய்யன்பினாலே
*குமரியின்கவி*
*சந்திரனின் சினேகிதி*
_சினேகிதா_ _ஜே ஜெயபிரபா_
வாரம் நாலு கவி: காதல்
previous post