காதல் செய்தல் விடுத்து
வசியம் செய்தல் சரியா?
எதிர்த்து நிற்றல் மறந்து
செய்வினை ஏவல் குறியா?
உழைப்பும் முயற்சியும் விடுத்து
அடுத்தவர் வீழ்ச்சிக்கு சதியா?
மந்திரத்தில் மாங்காய் விளைந்தால்
இயற்கை என்ன பிழையா?
மனுஷ்யம் பேணுவீர் நட்பே
அமானுஷ்யம் என்பது தப்பே!!
பூமலர்