வாரம் நாலு கவி: தாயின்

by admin 3
12 views

தாயின் கருவில் உயிர் மலர்ந்தது//
ஒவ்வொரு  நாளாய் வளர்ந்து வந்தது//
மண்ணின் மணத்தை உணர்ந்த தாய்//
பெண்ணின் பெருமையை உணர்ந்த தருணம்//
மொட்டாய் மலர்ந்தும் பூமியை பார்த்தது//
தாய்மையில் பூரித்த தாய்  சிரித்தாள்//
தாயின் மடியில் சுகம் தேடியது//
சுகத்தில் தாய் தன்னை மறந்தாள்//
மகப்பேறு வாழ்வின் அற்புத வரம்//
அன்பின் கலசம், இனிய மலர்சரம்//

உஷா முத்துராமன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!