வாழ்நாள் வலியெலாமும் ஒருசேர வலித்திடுமே
வாழ்ந்திட வேண்டுமா இனியுமெனவே தோன்றிடுமே
ஏன் தான் பெண்ணாய் பிறந்தேனோ!?
பிள்ளை பெறவும் ஆசையுமேன் கொண்டேனோ?
என்றே எண்ணிடவும் தோன்றிடுமே என்றாலும்
நன்றாய் நலமாய் பிள்ளையும் பிறந்திடவே
பத்துமாதம் சுமந்து பத்தியமும் இருந்து
படாத பாடெலாமும் பட்டும் கூட
பிள்ளையின் முகம்தனை பார்த்திட்ட நொடியிலே
உள்ளமுமெண்ணுமே இன்னும் வேதனை சுகிக்கலாமென்றே!!
*குமரியின்கவி*
*சந்திரனின் சினேகிதி*
_சினேகிதா_ _ஜே ஜெயபிரபா_
வாரம் நாலு கவி: வாழ்நாள்
previous post