உணர்வின் ஓசைக்கு
உருவம் தந்து
பிறந்த நிலத்தின்
பிரயாணிகளைப் பிணைத்து
நானென்பதை நாமென்றாக்கிய முதல் மந்திரம்
புலம்பெயரும் போதும்
ஒருபிடி மண்ணால்
குலக்கடவுளை குடியேற்றி
காலத்துக்கும் காத்த
தலைமுறையின் வழிவந்த
சிறு தளிர்கள்
புலனக்காலத்தில் விமானக்கலத்தில்
மண்விட்டு மண்ணுக்கு
விண்ணில் பறந்தாலும்
கருமொழியின் உயிர்வேரின்
சிறுதுளியை உதிரஞ்சுமக்குமாயின்
ஆயிரமாயிரமாண்டாயினும்
அழிவற்ற அடையாளத்தின் தாயெனும் சிறப்பு சிரம்தாழாதே!
புனிதா பார்த்திபன்
வாரம் நாலு கவி: உணர்வின்
previous post