கையிலே கைபேசி இடம்பிடிக்க
காதிலே ஒலிவாங்கி குடியிருக்க
சுற்றமும் நட்பும் மறந்திருக்க
புலனத்தில் வாழுகின்ற மனிதரெல்லாம்
எளிதாக செல்லவியலா கடலிடையே
எழுந்துநிற்கும் தனித்தீவாய் ஆகுவரே!
எதிரில்வரும் சொந்தங்களை உதறிவிட்டு
கைபேசி தனித்தீவில் வாழ்ந்திடாதீர்!!
பூமலர்