அல்லியிதழொத்த வெண்நீர்படுகையின் மத்தியிலே
சுந்தரமாய் அமைந்த அவள்
கருவிழித்தீவில் அங்கமாக விழைகிறேன்
பாலியும் மாலத்தீவும் தோற்றொதுங்கும்
அந்நயனத்தில்
பிம்பமாக வழியற்று
தூசியாகிட வரம் கேட்கிறேன்
ஒருமுறையேனும்
அவ்வெண்ணாற்றில் விழுந்து
கருநிலவில் கால்பதித்து கரைந்தோட!
புனிதா பார்த்திபன்
வாரம் நாலு கவி: அல்லியிதழொத்த
previous post