தையல் இயந்திரம் தோழி அவளுக்கு,
ஒவ்வொரு தையலும் ஒரு வேர்வை துளி.
சிவப்பு திரவம் குவளையிலே,
வெறும் நீரல்ல, உழைப்பின் சாட்சி.
பூக்கள் போட்ட மெல்லிய ஆடை,
அவள் கனவுகளின் வெளிப்பாடு.
ஊசி இறங்கும் ஒவ்வொரு முறையும்,
குடும்பத்தின் பசியை வெல்லும் ஆயுதம்.
இரவும் பகலும் உழைக்கிறாள் அவள்,
சிரித்த முகத்தோடு கடமையைச் செய்கிறாள்.
சிவப்பு திரவம் ஒரு குறியீடு,
அவள் சிந்தும் உழைப்பின் குருதி.
இ.டி.ஹேமமாலினி
படம் பார்த்து கவி: தையல்
previous post