படம் பார்த்து கவி: தையல்

by admin 3
10 views

தையல் அவள் பாதங்கள் தன்னிச்சையாய்த்
தையல் மெஷினில் பெடல் மிதித்தே
தைத்துக் குவிக்க.. பால் தவிர்த்த கிரீன்
டீ  மேசை மேல் கேட்பாரற்று…. ஆசையாய்க்
கற்ற தையற்கலை காலத்தின் கட்டாயத்தில்
பிழைப்பாய் உருமாற நிற்காமல் ஓட்டம்
ஓய்வின்றியே….இவள் பாதங்களும் பெடலும்
ஒன்றோடொன்று இசைந்தே பயணித்ததில் அங்கே
ஆயத்த ஆடைகளின் அணிவகுப்பு … தையல்
இருவருக்கும் ஓய்வு என்பதே அரிதோ?

நாபா.மீரா

You may also like

Leave a Comment

error: Content is protected !!