படம் பார்த்து கவி: ✨முடியாதமுடிவாய்..✨

by admin 2
101 views

✨முடியாதமுடிவாய்..✨

நிறையொளிமிகு முழுமதியும்

குறைந்து கரைந்து

மறைந்தே போயினும்

பிறையெனவே மீண்டுமாய்

வளர்ந்து வளர்ந்து

வானில் ஒளிருமே

விழுந்துவிட்ட விதையதுவும்

வீழ்ந்திடுமோ விழுந்ததனால்

அழுக்கில் அமிழ்ந்தியே

அழுகியும் அழியாமல்

முடிவே முதலெனவாய்

முகிழ்த்திடுமே மரமெனவே

முடிவென்று ஏதுமில்லை

முயன்றிடு முன்னேறலாம்

ஜே ஜெயபிரபா

You may also like

Leave a Comment

error: Content is protected !!