அகமும் அழுக்கில்லா அறமுடன் வாழவே
சுகமும் பிறரடைய சுயநலமும் சிறிதுமின்றி
சூழ்நிலைக்காய் மாறாது சுத்தநெறி பேணியே
தாழ்நிலையே ஆனாலும் தருமநெறி தனைக்காத்து
தன்னிலை போலே பிறர்நிலையும் போற்றியே
எந்நிலையும் ஆனாலும் புண்ணியங்கள் புரிந்திட்டே
எல்லா உயிரையும் நல்லா நேசித்தே
பொல்லாங்கும் பொய்யுமின்றி இல்லார்க்கும் ஈந்தளிப்போமே..
*குமரியின்கவி*
*சந்திரனின் சினேகிதி*
_சினேகிதா_ _ஜே ஜெயபிரபா_
வாரம் நாலு கவி: அகமும்
previous post