அண்டமும் அகிலமும் அமானுஷ்யமே
ஆண்டவன் படைப்பெலாம் அமானுஷ்யமே
படைத்த இறைவனும் அமானுஷ்யமே
படைப்பிலுதவும் படைப்பெலாமும் அமானுஷ்யமே
கருவின் துளியும் அமானுஷ்யமே
தருவின் விதையும் அமானுஷ்யமே
தாயை தள்ளிவைத்தலும் மானுஷ்யமோ
தரணி இயல்பளித்தலும் மானுஷ்யமா
மனுஷ்ய அறிவறியாதவையே அமானுஷ்யமாம்
மனசுமழிந்தே மானுஷ்யமுமளிந்தே அமானுஷ்யமாகிடுதே!?
*குமரியின்கவி*
*சந்திரனின் சினேகிதி*
_சினேகிதா_ _ஜே ஜெயபிரபா_
வாரம் நாலு கவி: அண்டமும்
previous post