அறிவுத்துளியால் கோர்த்துத் தொடுத்த மொழிச் சரங்கள்
சதுர செவ்வகப் பெட்டகத்தினுள்
சத்தமற்று வரிசையிட்டு
விழிகள் வாசிப்பில் மூளையை மனதை அடித்தெழுப்பி
புள்ளியைக் கமாவாக்கி கேள்விக்குறியிடும் வித்தையை விருந்துவைத்து
துளி மண் தூக்கி
ஓர் குச்சியேந்தி
பூரணமாகும் எறும்புப் புற்றாய் குருவிக் கூடாய்
அடியறிவில் படரும் கிளையொன்றும் புத்தகவுரத்தின் பெயரேந்துமே
கற்ற நூலளவேயாம் நுண்ணறிவென்ற ஔவை சொல்லினடையாளமாய்!
புனிதா பார்த்திபன்
வாரம் நாலு கவி: அறிவுத்துளியால்
previous post