வாரம் நாலு கவி: இடியாப்பம்

by admin 3
18 views

இடியாப்பம் கறிக்குழம்பு வகைகளுடன்
பிரியாணியும் பிறவுணவு வகைகளென
விதவிதமாய் உண்டவர்கள் வீணாக்கியதை
குப்பையிலிட்டு
கழுவியே சுத்தமாக்கியவள்
விடைபெற்று வீடு வந்து
பசித்தவயிறுக்கு பழங்கஞ்சி பருகினாள்

*குமரியின்கவி*
*சந்திரனின் சினேகிதி*
_சினேகிதா_ _ஜே ஜெயபிரபா_

You may also like

Leave a Comment

error: Content is protected !!