ஊதியத்தை நான் பெறும் முன்
நீ பெற்று விடுகிறாய்!
சிறுதுளி என்று நான் தந்தால்
பெறுதுளி நீ ஆக்குகிறாய் !
செலவு செய்ய நினைத்தால்
கோபித்து குறைந்து விடுகிறாய் !
வாங்கியதை உன்னிடம் கொடுத்தால்
வயிறு புடைத்து வரி கட்ட வைக்கிறாய் !
எனக்கு விடுமுறை என்றால்
நீ கதவடைந்து விடுகிறாய் !
நீ விடுப்பு எடுத்து
எங்களை அழைய விடுறாயே !
சேர்ந்து வைத்த ஆசையை போக்குபவன் நீ !
உன் சேமிப்பு செயலில்
வாழ்கிறோம் நாங்கள்!!!
*கவிஞர் வாசவி சாமிநாதன்
திண்டுக்கல்
21.12.24*
வாரம் நாலு கவி: ஊதியத்தை
previous post