எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும்
அப்பொருள் மெய்ப்பொருள் அறிந்து கூறல்
பொருத்தம் ஆகும் என்றும் மாந்தர்க்கு
வருத்தம் மேலிடும் தன்னிச்சையாய் பேசினால்
தற்குறித்தனம் என ஏசுவர் பலர்
தன்மதிப்பிழக்கக் காரணம் ஆவர் சிலர்
எதையும் ஏனெப்படி எதனால் எதற்கென
அதையும் கேள்விக் குட்படுத்தித் தெளிந்து
உண்மையை வென்று பேசுதல் நன்று
நன்மையே நல்கும் மாந்தர்க்கு என்றும்.
..பெரணமல்லூர் சேகரன்
வாரம் நாலு கவி: எப்பொருள்
previous post