கண்ணில் தெரிந்த உன் பார்வை,
கரைந்துவிட்டேன் உன் உன் அன்பு மெழுகில்
மௌனத்தில் சொல்லும் கவிதைகள்,
மனதோடு பேசும் அதை நீ அறியாயோ?
காற்றில் கலந்த. உன் காதலை தான்
என் உள்ளம் தேடும் என்பது உனக்கு புரியாதோ?
நேர்த்தியான உன் உதடுகள் சிந்தும்
புன்னகையில் தேன் துளிகளை கண்டேன்
காதல் நதியாய் நீ ஓடினாள் நான் உன்னை தொடரும் ஒரு நதியாவேன்
விழிகளால் எழுதும் காதல் வரலாறு ,
அதற்கு அழிவு என்பதே கிடையாதே…
உன் நினைவில் மலரும் பொழுதுகள்,
உலகத்தை மறக்கும் தருணங்கள்.
நேசம் என்றோர் பொக்கிஷத்தில்,
நித்தமும் நீயே ஒளியாய் இருப்பதால் காதல் ஒளியில் மகிழ்கிறேன்
உஷா முத்துராமன்
வாரம் நாலு கவி: கண்ணில்
previous post