கன்னத்தில் கைவைத்து இழுத்தார் செவிலி!
கருப்பை கடந்து விழுந்தேன் உலகில்!
கன்னத்தில் மைப்பொட்டு வைத்தாள் அன்னை
திருஷ்டி இன்றி சென்றேன் பள்ளி!
கன்னத்தில் சந்தனம் தடவினாள் அத்தை
பூபெய்து, புகுந்தவீடு சென்றேன் அன்று!
கன்னத்தில் முத்தமிட்டு மகிழ்ந்தார் கணவர்
மகவை ஈன்று கொண்டேன் மகிழ்ச்சி!
கன்னம் தொட்டு அழுதார் உறவினர்
கடமை முடித்து எரிந்தேன் தீயில்!!!
பூமலர்