கழிவு இல்லையேல் தூய்மை இல்லை
கழிவு இல்லையேல் சுகாதாரம் இல்லை
மழையில் கழியும் அசுத்தம் யாண்டும்
பிழைகள் ஒழிய கழிவு வேண்டும்
பழையன கழிதலும் புதியன புகுதலும்
தேவையின் நிமித்தம் யாவரும் புரிதலும்
புறத்தின் கழிவுகள் போதாது என்றும்
அகத்தின் கழிவுகள் கழித்தல் நன்று
கழிவுநீர்க் கால்வாய் ஊர்களின் நலன்
பொழியும் சுகாதாரம் மாந்தர்க்குப் பலன்
…பெரணமல்லூர் சேகரன்
வாரம் நாலு கவி: கழிவு
previous post