சித்திரமாய் ஆரம்பித்தான் ஆதியவன் தன்மொழியை
கண்டதெல்லாம் வரைந்துவைத்தான் மற்றவரும் பார்த்திடவே!
புலியிடம் தப்ப மானிடம் ஓட
தடயங்கள் குறித்து வேட்டையும் நடத்திக்கொண்டான்!
சித்திரமும் ஒலிவடிவும் கண்டவற்றின் பேராக
ஓவியமே வட்டெழுத்தாய் மாறியதே காலம்போக!
இயற்கையன்னை அருளித்தந்த முதன்மொழியே தாய்மொழியாம்
திரிபுபல கண்டாலும் வளர்ந்துவரும் செம்மொழியாம்!
வேலைக்கொன்று தொடர்புக்கொன்று கடல்தாண்டி பிழைப்புக்கொன்று
ஆயிரம்நீ கற்றாலும் தாய்மொழியே சிந்தைமொழி!!
பூமலர்