தஞ்சமென வந்தமர்ந்த
எப்பொருளாயினும் ஏற்று
பத்திரமாய்ப் பாதுகாத்து
அரணாய் அமர்ந்து
மதிலோரத்தில் ஓரமாய்
ஒதுக்கப்பட்டாலும் ஒய்யாரமாகி
புறமுகம் காட்டாமல்
ஓயாது உழைக்கும்
அகத்தினுள்ளே அமைதியாய்
ஆரவாரம் ஒழித்துப்
பணியாற்றும் சேவை
இல்லமதற்குத் தேவை
ஆதி தனபால்
வாரம் நாலு கவி; தஞ்சமென
previous post