தாயின்வழி கற்று தலைமுறைக்கும் கற்பிக்கும்
தனிமொழி தானன்றோ தாய்மொழி என்பது
தனித்தனி மொழியே வெவ்வேறு இடங்களிலாயினும்
தனித்தன்மை உடையதன்றோ நம் தமிழ்(தாய்)மொழி
அமிழ்தினும் இனிதென ஆனந்தம் அளித்தே
இன்னுமின்னும் இன்பமளித்தே ஈசனையும் ஈர்த்திடுமே
உயிரினுக்கும் உயிரளித்தே ஊற்றெனவே நாவிலூறுமே
எட்டுத்திக்கும் எடுத்துச்செ(சொ)ல்லுவோம் ஏற்றமிகு ஏகமொழியினையே
ஐந்திணையரும் ஐயமறவே ஒளிர்வித்த ஒளிர்தமிழினையே
ஓயாது ஓதி ஓம்பியே ஓங்காரமாக்கிடுவோமே….
*குமரியில்கவி*
*சந்திரனின் சினேகிதி*
_சினேகிதா_ _ஜே ஜெயபிரபா_
வாரம் நாலு கவி: தாயின்வழி
previous post