தேகம் வியர்க்க உழைக்கும் மகளிர்
உழைப்பின் பயனாய் வலிந்த உடலமைப்பு
இயற்கையில் விளைந்த ஆரோக்கிய உணவு
இவ்வாறு எல்லாம் இருக்கும் பெண்டிர்
சிறந்தத் தலைமுறையைத் தந்திடும் தேவதை!
வஜ்ஜிர தேகமும் குறைவில்லா ஊட்டமும்
மது,வாது சூதில்லா மனமும் நடத்தையும்
கொண்டிருக்கும் ஆடவரே குலம்வளர்க்கும் தேவர்கள்!
மகப்பேறு என்பதொன்றும் கடமையின் செயலல்ல
ஆகச்சிறந்த மனிதர்களை நாட்டிற்காக பெறுவதுவே!!
பூமலர்