வாரம் நாலு கவி: நகர

by admin 3
38 views

நகர விடாத இயலாமை
உயர விடாத பொறாமை
தாமதப் படுத்தும் ஆற்றாமை
நல்ல சொற்கள் கேளாமை
புதிதாய் எதையும் முயலாமை
துரத்த முடியாத இல்லாமை
குருடாய் மாற்றும் கல்லாமை
இந்த ஆமைகள் எல்லாம்
புகுந்த வீடு உருப்படாது
ஆமைக்கு ஓடே பலம்


-பாக்கியலட்சுமி

You may also like

Leave a Comment

error: Content is protected !!