நாள்பட்ட பலவும்
கழிவென குப்பையாக
உள்ளமதில் சேர்த்திடும்
பகையும் கழிவன்றோ
வெறுப்பும் பொறாமையும்
தேவையற்ற கழிவே
உடற்கழிவுகள் சேர
ஆரோக்கியம் பாதிக்க
மனதிலும் கழிவுகள்
மனநலனுக்கு ஏற்றதிலையே
நாள்பட்ட கழிவு
நோய்க்கு வழிவகையே
தீராக் கோபமும்
நோயுண்டாக்கும் கழிவே
கழிவைக் களைய
முனைதல் அவசியமே
உணர்ந்தால் மிஞ்சிடும்
நல் ஆரோக்கியமே !
கழிவு களைந்து
களிப்புடன் வாழ்வோம் !
பி. தமிழ் முகில்
வாரம் நாலு கவி: நாள்பட்ட
previous post