பருவ மாற்றத்திற்கு விடை பெற்ற நான்
பக்குவமாய் வழியனுப்பிவிட்டதால்
கவலை வலைக்குள் அகப்படவில்லை
மீண்டெழும் நம்பிக்கையால்
உதிர்ந்ததை சேர்க்க
முடியாவிட்டாலும்
நுண்ணறிவால் புதுப்பிக்க முடியுமென்ற நினைப்பினால்
காத்திருந்தேன்
கிளைக்கு வலு சேர்ப்பதுதான்
முதல் வேலை
உள்ளிருந்த பசுமைத் தளிர்கள்
தாலாட்டலில் வெளிப்பட
உடல் சிலிர்த்துப் போனேன்
அறிவின் மறுபக்கம்
என் பக்கம் என்பதறிந்தேன்
பச்சையமாய்ச் சூழ்ந்தேன்!
ஆதி தனபால்
வாரம் நாலு கவி: பருவ
previous post