புதிதாய் புலர்ந்தது புதியதோர் புத்தாண்டு
புத்துணர்ச்சி புத்தெழுச்சி புன்னகையும் பூத்ததுவே
எத்தனை நாளோ புத்தாண்டின் புத்துணர்ச்சி
எல்லாமும் முடிந்ததுவே இன்றைய தினத்தோடு
இல்லாரும் உள்ளோரும் நல்லாரும் பொல்லாரும்
இருந்திடுவர் அப்படியே இதிலேதும் மாறுமோ
திருந்திடவே தீட்டிடும் தீர்மானமும் தொடர்ந்திடுமோ!
வருந்திடுவோர் வருத்தங்களும் தொடராது இருந்திடுமோ..?
ஒருநாளில் கொண்டாடியே தீர்த்துவிடும் கூத்திதுவோ
ஒவ்வொரு நாளையும் புதிதாக்கவே முனைந்திடுவோமே…!!
*குமரியின்கவி*
*சந்திரனின் சினேகிதி*
_சினேகிதா_ _ஜே ஜெயபிரபா_
வாரம் நாலு கவி: புதிதாய்
previous post