மதிநுட்பம் தாங்கி நடைபயின்ற காலங்கள் கடந்திட
நுண்ணறிவின் புதிய பரிமாணம், இயற்கையைக் களவுகொண்ட
செயற்கை முகங்கள் யாவிலும் இயந்திரங்கள் கோலோச்ச
ஆதாரமான மனிதனோ ஆதார் அட்டையில் மட்டுமே…
ரோபோக்கள் உலாவரும் நிலையில் செயற்கையில் உறைந்த
அந்த ஆறறிவு ஜீவன்கள் எங்கே தேடித்
தவிக்கிறேன் கிடைத்தால் தகவல் அனுப்புங்கள் வருவேன்
இயற்கை அன்னையின் நிழலில்
இளைப்பாறச் செய்திடவே!
நாபா.மீரா
வாரம் நாலு கவி: மதிநுட்பம்
previous post