மேலேயடித்தேன்
உயர்ந்தால் தாழும் தாழ்ந்ததுயருமென்றது
எட்டியுதைத்தேன்
உந்துதலே உயர்வை எட்டச்செய்யுமென்றது
குறிபார்த்தடித்தேன்
சரியான பாதை இலக்கையெட்டுமென்றது
வாழ்வைச் சொன்ன புவிக்கோளபிம்பம் ஓரத்தில்கிடந்தது
ஆட்டமெல்லாம் உயிர்காற்றுள்ளவரை மட்டுமேயென பூடகமாயுரைத்தபடி!
புனிதா பார்த்திபன்
வாரம் நாலு கவி: மேலேயடித்தேன்
previous post