வருடமது கடந்து
சென்ற வேளை
வருத்தங்கள் அனைத்திற்கும்
வருமான வரியாய்
சுமந்து வந்த
வலிகளைப் பரிசாக்கிவிட
வசந்தத்துடன் வாசலுக்கே
வந்த புத்தாண்டே
நின்னுடைய ஆதிநாளை
உவகையுடன் அழைக்க
கதிரின் முதலொளி
நிலத்தை முத்தமிட்டுப்
புதிய மணத்துடன்
களத்தில் கலக்க
சின்னஞ் சிறு
மலரிதழ் மௌனமொழியால்
சப்தமில்லாமல் சாதித்து
சந்நிதிக்கு வர
அலங்காரத்தில் இடம்பிடித்து
வாழ்த்தைப் பகிர்ந்தது!
ஆதி தனபால்
வாரம் நாலு கவி: வருடமது
previous post