படம் பார்த்து கவி: தொங்கு விளக்கு

by admin 1
115 views

தொங்கு விளக்கு..
வானத்து விண்மீன்
போல
தூரத்து சிறு ஒளி..
இருட்டின் இடையே
பார்க்கலாம்
ரசிக்கலாம்…

அருகிருக்கும்
அன்பின் கரம் பற்றி
அன்பு மொழி
பகிரலாம்…

எத்தனை முகங்கள்
சுற்றி இருந்தாலும்
மயக்கும் இருட்டில்
மேலிருக்கும்
சிறு வெளிச்சம்
நெருக்கம் கூட்டும்..
முகத்தின் அழகும்
கண்களும்
மயக்கித்தான்
பிரகாசிக்கும்…

சூழ்நிலையை
ரம்மியமாக்கும்
தொங்கு விளக்கு…


S. முத்துக்குமார்

You may also like

Leave a Comment

error: Content is protected !!