வாரம் நாலு கவி: ஆரோக்கியமே

by admin 3
19 views

ஆரோக்கியமே  வாழ்க்கையின் அஸ்திவாரம் என உணர்ந்துவிடு
அமைதியான மனம்  வேண்டுமெனில் உணவில் கவனம்
உணவும் உறக்கமும்  சீரானால் ஆரோக்கியம் வருமே
உடலும்  உற்சாகமாக வைத்து விடு அதுவே
திடமான ஆரோக்கியம் என நம்பி விடு
பழங்களும் காய்களும்  அதிகம் சாப்பிட்டு வருவதே
பளிச்சென்று இருக்கும் உன் வதனம் அறியாயோ
நீர் அதிகம் குடிப்பது சுகமான ஆரோக்கியம்
நோயற்ற வாழ்வு வேண்டுமென எண்ணி விடு
ஆரோக்கியம் என்றும் உன்னை தொடர முயன்றுவிடு

உஷா முத்துராமன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!