இரு மனங்கள் மட்டும்
இணைய வில்லை
இரு மணங்களும்
இணையும் நாள்
உனக்கு நான்
எனக்கு நீ என்ற
புரிதலோடு தாம்பத்யம்
உயிரோடு உறவாடும்
நாள்
இருவர் மட்டுமே
உறவுகள் அல்ல
இருவரின் பெற்றோரும்
உறவாகும் இனிய நாள்
காதலர்கள் மட்டும்
இணைய வில்லை
புனிதமான காதலும்
போற்றப்படும் நாள்.
இல்லறம் எனும்
நல்லறம் நலமாக
நடைபயிலும்
துவக்க நாள்.
மு.வைரமணி
வாரம் நாலு கவி: இரு
previous post