இளைய
தலைமுறையின்
காதலில்….
இந்தியாவின்
விண்வெளி
ஆராய்ச்சியில் ….
வதந்தியை
ஆராயாமல்
பரப்புவதில் …
விலைவாசி
கூடுதற்கு
பதுக்குவதில்…
காவியணிந்தாலே
சாமியென
ஏமாறுவதில் ….
கல்வி
வியாபார
பொருளாவதில் ….
நடிகர்கள்
கண்ணுக்கு
தெய்வமாவதில் ….
நாகரீகமென
உடையை
குறைப்பதில்….
வேலி
தாண்டுவது
எல்லாமே …
விவேகம்
தொலைத்த
வேகம்.
“சோழா “புகழேந்தி
வாரம் நாலு கவி: இளைய
previous post