வாரம் நாலு கவி: உயிரை

by admin 3
44 views

உயிரை உறிந்து உடலை உரித்து
மேற்றோலில் வைத்தூறு
திணித்து கண்முன்னிருத்த
காளைக் கன்றீன்று
காவுகொடுத்த கபிலையும்
தாயன்பு தாளாது
மடிக்கரை உடைக்கிறது
குறுவாயுறியா முதற்ப்பாலும்
கடைப்பாலாகி கண்ணீராயுதிர்கிறது!

புனிதா பார்த்திபன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!