உரைப்பதா மறைப்பதா
சிந்தித்தே நித்திரையுதிர்ந்தது
நின்போலவனுமன்றோ
இவ்வாய்ப்பினுக்கு தவமிருக்கிறான் – அறிந்தும்
வாய்ப்பிருப்பதாய் வந்ததெரிவலை
மறையென மனமுரைத்தது
மனசாட்சியை மறுதலித்து
மறைத்துப் புறப்பட்டேன்
முற்றத்தை எட்டும்முன்
முணுமுணுத்தது அலைபேசி
அவனேதான் அதேசெய்தியோடு
அறிந்ததும் பகர்ந்தனென்றான்
சுருக்கென்று தைத்தயென் சுயநலத்தை காரியுமிழ்ந்தது
பங்கிட்டுப் புசித்துக்கொண்டிருந்த
எதிர்முற்றத்துக் காகம்!
புனிதா பார்த்திபன்
வாரம் நாலு கவி: உரைப்பதா
previous post