ஊரில் எவனுக்கோ உதவி செய்வாய்!
நற்பெயர் வாங்கிட முயற்சி செய்வாய்!
அன்னையவள் வரிசையில் அரிசி வாங்க
முதியோர் நலனுக்கு நிதி சேர்ப்பாய்!
உந்தை உனதுயர்வுக்கு உறங்காமல் உழைத்திட
பொதுநலத் தொண்டன் என்று மார்தட்டுவாய்!
அவனவன் குடும்பத்தின் சுயநலம் பேன
உதவிக்கு அழைப்போர் குறைவதும் நிஜமே!!
பூமலர்