எதற்கும் விலை மட்டுமல்ல காலாவதியாகும் தினமும்
உண்டு என்று உணர்ந்தோர் யோசித்து எதையும்
மனம் விரும்பினாலும் வாங்க தயங்குவது உண்மை
ஆனால் மனம் விரும்பும் அன்பரிடம் வைக்கும்
அன்பு பரிவு பாசத்திற்கு என்றுமே விலை
இல்லை அறியாயோ நட்பு வட்டமே இதை
எல்லையில்லா பாசத்துடன் பழகும் சொந்த பந்தங்கள்
மெல்ல மெல்ல புரிய வைப்பதால் உண்மையானது
கள்ளமில்லா நட்பும் உறவும் கிடைப்பது உறுதி
வெள்ளை மனதுடன் பழகி கொள்ளை இன்பமடைவோம்
உஷா முத்துராமன்
வாரம் நாலு கவி: எதற்கும்
previous post