என் உள்ளத்தின் பாரங்களை
உன் மடியில்
இறக்கிவிட்டேன்
ஏந்திக் கொண்டாய்
மறுப்பின்றி
பிடித்தமில்லாது கசக்கி
எறிந்தேன்
வடுக்களை வலிகளை தாங்கினாய்
கிழித்தெறிந்து ஆசுவாசம் தேடினேன்
அமைதியில் ஆழ்ந்த நொடியில்
மீண்டும் உனை தேடினேன்
மௌனமாய் பார்த்து புன்னகைத்தாய்
என் உற்ற துணையாய் !
பி. தமிழ் முகில்