எப்போது…?
தனியொருவன்
பசியால்
வாடாத
போது…..
வறுமை
அடியோடு
ஒழியும்
போது….
வேலையில்லா
திண்டாட்டம்
ஒழியும்
போது…
பிச்சை
விபச்சாரம்
ஒழியும்
போது…
பெண்
சுதந்திரம்
அடையும்
போது…..
ஊழல்
லஞ்சம்
ஒழியும்
போது….
இல்லா
சாதிகள்
ஒழியும்
போது…
பாலியல்
வன்கொடுமை
ஒழியும்
போது…
சத்தியமாக
உண்மையாக
மனமார
உறுதியாக…
கொண்டாட்டம்
கொண்டாட்டம்
கொண்டாட்டம்
கொண்டாட்டமே.!!!
ஆர் சத்திய நாராயணன்
வாரம் நாலு கவி: எப்போது
previous post