எழுத்துலகு தேசத்தின்
நுழைவாயில்
அறிவுச் சுடரொளியினைத்
தூண்டிவிட
பகுத்தறிவு வளர்ச்சியினை வர்க்கமூலமாக்க
பள்ளிச் சாலையில்
நடைபயின்றால்தான்
வறுமையெனும் பாலைவனம்
சோலையாய்
வசந்தகாலத்தின் பிறப்பிடமாய்
உருமாறி
தேவைகளை நிறைவேற்றும்
தேவதையாய்
பிறர் தயவில்லாமல்
வாழ
மூங்கில் காட்டிலிருந்து
பிரிக்கப்பட்ட
புல்லாங்குழலிசைக் கூட்டம்
பள்ளிக்கூடம் !
ஆதி தனபால்
வாரம் நாலு கவி: எழுத்துலகு
previous post