சந்ததியெனும் பாய்மரக்கப்பலை
வழிநடத்தும்
வளியாகி
மணமெனும்
சோலையில்
மனதிருவரின்
‘காசோலையாய்’
மனிதமெனும்
சங்கிலியைக்
கட்டியிழுக்கும்
வடமாய்
மூன்றாகிப்போன
முடிச்சால்
வதுவையதைப்
பதிவாக்கி
இல்லற
இலக்கியத்திற்கு
இலக்கணப்
பாதையை
உவகையுடன்
அழைக்கும்
உறுதிப்
பத்திரம்!
ஆதி தனபால்
வாரம் நாலு கவி: சந்ததியெனும்
previous post