சுயநலமிலா சொந்தமாகியே சோகமெலாம் சுகமாக்கிட
சுயம் நலம் நான் காணவே
என்னலனொன்றே பெரிதெனவே
ஏற்றனவெல்லாம் செய்தவனின்
தன்னலனேதும் நானறிந்தால்
தயங்கித்துணியாமல் தோற்பேனோவென
எந்நிலையிலும் அவன் நிலையறிய அனுமதியாதே
என்நிலை மேலேறிட தன்னாலானவெலாம் செய்திட்டே
விண்ணிலுயர்ந்து ஒளிர்ந்திடவே வழி காட்டியவன்
எந்நிலையும் நானறியாதிருந்திடல் எந்தனது சுயநலமாகிடாதோ!!?
*குமரியின்கவி*
*சந்திரனின்சினேகிதி*
_சினேகிதா_ _ஜே ஜெயபிரபா_
வாரம் நாலு கவி: சுயநலமிலா
previous post