சோதிடமெல்லாம் சோதனைக்குள்ளாக
நட்சத்திரங்களும்
நகையாடியதால்
ராசிகளுக்குள்ளும்
இடமேதும்
கிடைக்காமல்
மௌனராகமிசைக்க
பிரம்மனவனின்
படைப்புதனில்
அலட்சியம்
காட்ட
காட்சிக்கான
பொருளாய்
பார்வைகளுக்குள்
நுழைய
அவலட்சணமாகி
லட்சுமிகடாட்சம்
இழப்பைச்
சந்தித்து
சொந்தமான
மண்ணிலும்
முகவரியிழந்து
அகதியாய்
கதியேதுமில்லாமல்
மனதலை
சீற்றத்துடன்
அலைய
நங்கையெனப்
பெயரடையானாலும்
அலட்சியமாகத்தான்
பயணம்!!
ஆதி தனபால்
வாரம் நாலு கவி: சோதிடமெல்லாம்
previous post