தன்னலம் பேணல் இயல்பே ஆயின்
பிறர் நலம் போற்றல் சிறப்பன்றோ?
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பும் அன்பெனும்
உயரிய பண்பு வாரி வழங்கிடுமே
தாயுமானவன் இறைஞ்சிய அனைத்துயிர் இன்பந்தனை…
துலாபாரமாம் இயற்கை அன்னை பகரும்
செய்தி கேளீரோ.. அடுத்தவன் வீழ்வில்
துய்யும் வாழ்வு அப்பட்டமான சுயநலமன்றோ?
நாபா.மீரா
வாரம் நாலு கவி: தன்னலம்
previous post