நிஜம் நிசப்தமாகி
நிழலாய் நினைவானபின்
நினைக்கையில் எக்கிப்
பிடிக்கும் ஏக்கத்தில்
அகம் வெடித்து
கசியும் கண்ணீரோடு
உடல் கரைந்த
உயிரின் உருவை
சுமந்து கொண்டிருக்கும்
நிழற் படத்தை
உயிரிலேந்தி பதிக்கப்படும் முத்தத்தின் ஈரம்
கைப்பிடி நீரில்
உயிர்சுமக்கும் குறுமீனாய்
உருகிய உயிரின் மொத்த உயிரோட்டத்தையும்
சுமந்து சுவடாக்குகிறது
இழப்பு வலியை
நிழல் நுதழில்
வெளிர் ஓவிமாய்!
புனிதா பார்த்திபன்
வாரம் நாலு கவி: நிஜம்
previous post