பட்டுரோஜாக் கன்னங்களில் வெட்கப் பூக்கள்
இதழ்விரிக்க மறந்த ரோஜா ராணி
இப்படியாய்க் கவிஞர்கள் பெண்மையின் மெ(மே)ன்மையை
இலக்கிய வீதியில் உலவச் செய்திட
நவயுக நங்கையரின் கன்னங்களோ அரிதாரச்
சிவப்பில் மோகம்கொண்டு வீணாய்
மயங்குவதேனோ?
செயற்கைப் பூச்சுகள் ஈனும் நோய்கள் உணர்த்தி இயற்கையோடு இயைந்த பேரின்ப வாழ்வொடு கரம் கோர்க்கும் வழிகாட்டி
கன்னமிரண்டும் காக்க வருவாய் கதிர்வேலா!
நாபா.மீரா
வாரம் நாலு கவி: பட்டுரோஜா
previous post