பூமிப் புதையலுக்குள்
புதைந்து போய்
உருப்பெற்று
எளியோரின் கனவுலகினை விலையால் கைதாக்கி
காட்சிப்பொருளானாய்
மண்ணை உண்டு உறங்கிப் போன நீ
உயிர் பெற்று
ஒளிவிட ஒளிவிட
பொன்னாகிப்
பெண்களின் இதயச் சிம்மாசனத்தில்
இடம் பிடித்தாய்
தினசரி விலையில்
விலை பேசப்பட்டு
உயர்வாய்
உச்சத்தின் உச்சியில் உச்சாணிக் கொம்பாய்
வளர்ந்து
ஏழையின் பார்வைகளில் ஏக்கத்தை மட்டும்
மிச்சப்படுத்தி
விலையேற்றத்தில்
கொடி கட்டிப்
பறந்து நிற்கும்
உன்னை
என்ன விலை கொடுத்து
வாங்குவது!
ஆதி தனபால்
வாரம் நாலு கவி: பூமிப்
previous post